திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 லட்சம் பேருக்கு மேல் வசிப்பதாக 2011 Census புள்ளி விபரம் கூறுகிறது. அண்டை மாவட்டங்களுக்கு நிகரான ஜனத்தொகை இருந்தாலும், மனநல சேவையில் (Patient / Doctor- ratio) திருவண்ணாமலை மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது. மருத்துவர்களின் பற்றாக்குறையும், மனநல சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையுமே இதற்கு காரணமாக அறியப்படுகிறது. இக்குறையைப் போக்குவதற்காக எங்கள் குழு தீவிரமாக போராடி வருகிறது. முறையான மனநல விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறுமுயற்சியே இக்கட்டுரை. மனநலம் பற்றிய சில உண்மைகள் :

நாம் பைத்தியம் என்று எண்ணுகிற மனச்சிதைவு (Schizophrenia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் நூறில் ஒரு விழுக்காடு மட்டுமே (1%) . பிற மன வியாதிகள் என்று பார்த்தால் 15% முதல் 30% வரை பரவலாக நம்மிடையே காணப்படுகிறது. ஆகையால் மனவியாதி என்றாலே பைத்தியம் என்று அர்த்தமல்ல. உடலில் இருதயம், நுரையீரல், கணையம், கல்லீரல் மற்றம் சிறுநீரகம் போன்றே மூளையும் ஒரு உறுப்புதான். மூளையின் செயல்பாட்டை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. ANS (Autonomous Nervous System) நம் உடலிலுள்ள அத்தனை உறுப்புகளையும் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தும் பகுதி. இது தன்னிச்சையாக நடைபெறக் கூடியது. இதை போல் ஹார்மோன்களும் (Endocrinology) தன்னிச்சையாக செயல்ப்படக்கூடியதே.

2. CNS (Central Nervous system) இது மனதைக் கட்டுப்படுத்தும் பகுதி . மனம் என்றால் நம் எண்ணங்களும் (சிந்தனை, திட்டமிடுதல், பகுத்தறிவு etc.) உணர்ச்சிகளும் (மகிழ்ச்சி, துக்கம், கோபம் etc.,) ஆகும். இதில் அடிப்படை தேவைகளும் (Biological Needs) (பசி, தூக்கம் மற்றும் காமமும்) அடங்கும்.

     அடிப்படையில் மூளையின் செயல்பாடு மின்கடத்திகளாலும் (Action Potentials) மற்றும் இரசாயண கடத்திகளாலும் (Neuro Transmitters) நடைபெறுகிறது. உடலில் கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருப்பது போல், மனதிலும் சூழ்நிலைகளின் நெருக்கடியை சமாளிப்பதற்கு எதிர்ப்பு சக்தி உண்டு. பிறப்பாலும், வளர்ப்பாலும், சூழ்நிலைகளின் தாக்கத்தாலும் (Bio – Psycho – Social model) ஒருவருடைய மன எதிர்ப்பு சக்தி குறையும்பொழுது அவருடைய இராசயணக் கடத்திகளின் சமன்பாடு குலைகிறதால் அவரவர் தன்மைக்கேற்ப பல்வேறு மன வியாதிகள் வெளிப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் பல்வேறு மன வியாதிகளை உலக சுகாதார மையம் (WHO) பகுத்து ஆராய்ந்து (Nosology) வெளியிட்டுள்ளது. இன்று நவீன மருத்துவத்தின் உதவியால் இவ்வியாதிகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் முடிகிறது.

      மனநல மருத்துவத்தில் குழந்தைகள் (Paediatrics), வாலிப வயது (Adolescents), பெரியோர் (Adults), முதியோர் (Geriatricts), மன நலம் தவிர குடிபோதை மீட்பு (Deaddiction), குடும்ப உறவுச்சிக்கல் ஆலோசனை (Marital Counseling), செக்ஸ் ஆலோசனை (Sex Counseling) மற்றும் கல்வி ஆலோசனை (Students counseling) ஆகியவையும் அடங்கும்.

மனவியாதிகளும் அறிகுறிகளும் :

• படிப்பில் / வேலையில் ஆர்வம் குறைதல், கவனக்குறைவு, ஞாபகமறதி, மகிழ்ச்சியின்மை, தன்னம்பிக்கை குறைதல், பசியின்மை, தூக்கமின்மை, மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவை மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவும் (Depression),

• குழப்பம், பயம், கவலை, கூச்சம், கைகால் நடுக்கம், படபடப்பு, கைகால் வேர்த்தல், மற்றும் தலைவலி ஆகியவை மனபதட்டத்தின் வெளிப்பாடாகவும் (Anxiety),

• தேவையற்ற, கட்டுப்படுத்த இயலாத எண்ணங்கள் (Obsessions), மற்றும் செயல்கள் (Compulsions). படபடப்பு, மயக்கம், மூச்சு முட்டுதல், உயிர் போகும் பயம் (Panic). சாமி / பேய் ஆட்டம் (Hysteria). மாற்றி மாற்றி பேசுதல், மயக்கம், வலிப்பு மாதிரி அறிகுறிகள் (Conversion) ஆகியவை மனபதட்டத்தின் பிற வெளிப்பாடுகளாகும் (Anxiety Disorders).

• பரிசோதனைகள் (Lab Investigations) நார்மலாக இருந்தும் – தீராத / கட்டுப்படாத மார்வலி, இடுப்புவலி, நரம்பு / மூட்டு / தசைவலி மற்றும் இது சம்பந்தமாக வரும் சந்தேகம், பயம் ஆகியவை சோமோட்டோஃபார்ம் வியாதிகளின் வெளிப்பாடாகும் (Somatoform Disorders).

• மன எழுச்சி (Mania), மனசிதைவு (Schizophrenia), சந்தேக நோய் (Paranoia), தலைவலி (Headache), வலிப்பு (Epilepsy), மூளை மழுங்குநோய் (Dementia), தூக்கமின்மை (Insomnia), உடலுறவில் சிக்கல் (Sexual Dysfunction) போன்றவை பிற மன வியாதிகளாகும். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து அறிகுறிகளுக்கும் சிறந்த முறையில் விஞ்ஞான பூர்வமான விளக்கம், சிகிச்சை மற்றும் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.

• மனவளர்ச்சி குன்றிய நிலை (Intellecutual Disability), கற்றல் குறைப்பாடு (Learning Dysfuntion), கவனக்குறைவு மற்றும் துறுதுறுப்பு (ADHD), ஆட்டிஸம் (Autism) போன்ற வியாதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சிகளின் மூலமாக முன்னேற்றம் கொண்டுவரலாம். தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பிணியாளர்கள் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

01
02
03
04
05
06
07
08
09
10
p 6
p1
p 2
p 3
p 4
p 5

மூட நம்பிக்கைகள் :

செய்வினை, பில்லி சூனியம், பேய் விரட்டுவது போன்றவை மன நோயை குணப்படுத்தும் என்று நம்புவது, திருமணம் செய்து வைத்தால் மனநோய் குணமாகிவிடும் என்றும் நம்புவது மனநோய் என்றாலே தீராத நோய் என்றும் எண்ணுவது, மனநோய்க்கான சிகிச்சை மாத்திரைகள் எல்லாமே தூக்க மாத்திரை என்றும் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்றும் இதனால் சிறுநீரகம் பாதிப்படையும் என்றும் எண்ணுவதும், மின் அதிர்வு சிகிச்சையை (Electro Convulsive Therapy) ஒரு மோசமான சிகிச்சை முறை என்றும் அது மூளையை பாதிக்கும் என்றும் எண்ணுவதும் மூடநம்பிக்கைகள் ஆகும்.

Todays Thought

News & Events

29/04/2018

Full Moon Day - Free mental
health awareness camp
at girivalam path

Contact us

Appa Mental Health Facility,
36, Muthuvinayagar kovil street,
Railway station road,
Tiruvannamalai-606601.
Telephone:+91 9444986370
                 +91 9487712953
                 +91 9487712952

E-mail: appahospital@gmail.com